செல்லும் இடங்களின் பதிவைப் பராமரிக்க பொதுமக்களிடம் பொலிஸ் கோரிக்கை!!

எதிர்காலத்தில் தேவைப்படும் என்பதால், பொதுமக்கள் தாம் செல்லும் இடங்களை அலைபேசியிலோ அல்லது ஒரு நோட்புக்கிலோ பராமரிக்குமாறு பொலிஸ் கேட்டுக்கொண்டுள்ளது.

ஒருவர் இருக்கும் இடத்தைப் பற்றிய தகவலை வழங்கும் அலைபேசி செயலியைப் பயன்படுத்தலாம் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் இன்ஸ்பெக்டர் அஜித் ரோஹானா தெரிவித்தார்.

மினுவாங்கோடா கோவிட் -19 கொத்தணியுடன் தொடர்புடைய நபர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் நிலை காணப்படுகின்றது என்று அவர் குறிப்பிட்டார்.

மினுவாங்கொட கோரோனா வைரஸ் பரம்பலில் இதுவரை ஆயிரத்து 552 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். தொற்று உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

“கோவிட் -19 நோயினால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்களை அடையாளம் காண்பது கடினமான பணியாகும். குறிப்பாக அவர்கள் பார்வையிட்ட இடங்கள், குறிப்பாக முச்சக்கர வண்டிகள் அல்லது அவர்கள் பயணம் செய்த வண்டிகளை அடிப்படையாகக் கொண்டது அடையாளம் காண்பது கடினமானதாக உள்ளது.

எனவே, சாத்தியமான அனைத்து தகவல்களையும் வெளியிடுமாறு அவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

அதேவேளை, முச்சக்கர வண்டி உள்ளிட்ட வாடகைக்கு வாகனங்களின் சாரதிகள் தங்களுடன் பயணிக்கும் நபர்களின் தகவல்களை பதிவு செய்வதற்கான ஒரு அமைப்பைப் பராமரிக்குமாறு கோரிக்கை முன்வைத்துள்ள அவர், நபர்கள் பயணம் செய்த தகவல் தேவைப்பட்டால் அவற்றைப் பயன்படுத்தலாம் என்றும் சுட்டிக்காட்டினார்.

Related Posts