செல்பி புகைப்படத்தால் 7 பேர் பலி -மிகப்பெரும் சோகம்!

கான்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட ஜுகி மற்றும் கொலோன்கஞ்ச் பகுதிகளை சேர்ந்த 7 நண்பர்கள் கங்கை நதிக்கு குளிக்க சென்றனர். அங்கு கடந்த 2 நாட்களாக பெய்த பலத்த மழையால் கங்கை நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

நண்பர்களில் சிவம் என்ற வாலிபர் குளித்து கொண்டிருக்கும் போதே தனது ஸ்மார்ட்போனை கொண்டு ‘செல்பி’ எடுக்க முயன்றார். அப்போது அவர் நிலைதடுமாறி தண்ணீருக்குள் மூழ்கினார். இதைப்பார்த்த அவரது நண்பர் மசூத் உடனே தண்ணீரில் குதித்து சிவத்தை காப்பாற்ற முயன்றார்.

ஆனால் நதியில் அதிக அளவு தண்ணீர் செல்வதால், மசூத்தும் நீரில் அடித்து செல்லப்பட்டார். அவர்களை காப்பாற்ற ஒருவர் பின் ஒருவராக மீதமுள்ள 5 பேரும் நீருக்குள் குதித்தனர். ஆனால் யாருமே கரை திரும்பவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த ​பொலிஸ் அதிகாரிகள் நீரில் மூழ்கி தேடும் பயிற்சி பெற்ற மீட்புக்குழுவினருடன் வாலிபர்களை தேடினர். ஆனால் 2 மணி நேரத்துக்குப்பின் 7 பேரும் சடலமாகவே மீட்கப்பட்டனர். இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

‘செல்பி’ மோகத்தால் 7 பேர் பலியான இந்த சம்பவம் கான்பூரில் மிகப்பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Posts