பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் போஸ்ட் செய்த அவரவர் செல்பி புகைப்படங்களையோ அல்லது மற்றவர்களது செல்பி புகைப்படங்களையோ மீண்டும் மீண்டும் பார்க்கும் பொழுது அவர்களுக்குள்ளே தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு, வாழ்க்கையில் ஒருவகையான திருப்தியின்மை நிலை ஏற்படுவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவித்துள்ளன.
விதவிதமாக செல்பி எடுத்து, பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் அதனை போஸ்ட் செய்வதில் இளைஞர்களிடம் தற்போது மோகம் அதிகரித்துள்ளது.
இதனிடையே, செல்பி கலாச்சாரத்தில் மூழ்கியுள்ள இளம் தலைமுறையினர் உணர்ச்சிகளை மதிக்காதவர்களாக மாறிவிடுகின்றனர் சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.
மற்றவர்கள் போஸ்ட் செய்திருக்கும் செல்பி புகைப்படங்களை லைக் அல்லது ஷேர் செய்யாமல் அதனை மீண்டும் மீண்டும் பார்க்கும் போது பார்ப்பவர்கள் சுய மரியாதையை இழப்பதோடு வாழ்க்கையில் திருப்தியின்மை ஏற்படுவதாக அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநில பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் ரௌக்சு வாங் தெரிவித்துள்ளார்.
டெலிமாட்டிக்ஸ் மற்றும் தகவலியல் பத்திரிகையில் இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது.