செல்ஃபி எடுக்க முயன்ற சகோதரர்கள் ரயில் மோதி உயிரிழப்பு!

பம்பலபிட்டி – கொள்ளுபிட்டி ரயில் நிலையங்களுக்கு இடையில் செல்ஃபி எடுக்க முயன்ற சகோதரர்கள் இருவர் ரயில் மோதி உயிரிழந்துள்ளனர்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் 12 மற்றும் 25 வயது மதிக்கத்தக்கவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ச்சியாக ஆபத்தான இடங்களில் புகைப்படம் எடுக்கும் முயற்சியில் பல உயிரிழப்புக்கள் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts