செருப்பு அணியும் மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம்: சர்வதேச ஆய்வு

வகுப்பறையில் சப்பாத்துக்குப் பதிலாக செருப்பு அணியும் மாணவர்கள் சிறந்த பெறுபேற்றை பெற்றுக் கொள்பவர்களாக காணப்படுகின்றார்கள் என பிரித்தானிய ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் டர்பிஷயர் பிராந்தியத்திலுள்ள ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு செருப்பு அணிய வாய்ப்பளித்து பின்னர் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.

இந்த ஆய்வை மேற்கொண்ட பேராசிரியர் ஸ்டீவன் ஹெரல் என்பவர் இது தொடர்பில் கூறும் போது, சப்பாத்து அணிந்த மாணவர்களை விடவும் செருப்பு அணிந்த மாணவர்களின் நடத்தைகள் சிறந்ததாக காணப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

பேராசிரியர் ஸ்டீவன், 25 நாடுகளிலுள்ள மாணவர்க்ள் தொடர்பில் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

Related Posts