கிளிநொச்சி ஜெயந்திநகர் பிரதேசத்திவ் கடன்சுமை என ஆலயப் பூசகரிடம் சென்றவரை செய்வினை அகற்றுவதாக கூறி பூசகர் கொடுத்த மருந்தை அருந்தியவர் பரிதாபகரமாக உயிரிழந்தார் குறித்த சம்பவத்தில் ஜெயந்திநகரச் சேர்ந்த ஆதித்தகுமார் வயது-50 என்பரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
குறி்த்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது
கிளிநொச்சி ஜெயந்தி நகர்ப் பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவர் கடன் சுமை என ஆலயப் பூசகர் ஒருவரிடம் சென்றுள்ளார் இதன் போது செய்வினை இருப்பதாக தெரிவித்த பூசகர் செய்வினையை அகற்றுவதற்கு ஒருவகை மருந்தை வழங்கி இருநாட்கள் உட்கொள்ளுமாறு கொடுத்துள்ளார் அதனையும் உரியவர் அவ்வாறே மேற்கொண்டுள்ளார். அதன் போது வாந்தி ஏற்பட்டுள்ளது இவ்வாறு வாந்தி ஏற்படுவதை பூசகருக்கு தெரிவித்த நியைில் அது செய்வினை அகலுவற்கு என பூசாரி தெரிவித்துள்ளார்.
எனினும் இறுதியில் வாந்தி குருதியாக வெளியேற ஆரம்பித்த போது ஏற்பட்ட உடல்சோர்வை அடுத்து குறித்த நபரின் உறவினர் வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
இவ்வாறு குருதி ஏற்படுவதற்கான காரணத்தை வைத்தியர் கண்டறிவதற்கு முன்பே நோயாளி மிகவும் ஆபத்தான கட்டத்தை நெருங்கிய போது காது மற்றும் மூக்குப் பகுதிகளாலும் குருதி வெளியேறியுள்ளது.
இதன்போது நிகழ்ந்ததை உறவுகள் வைத்தியர்களுக்கு தெரியப்படுத்தியதும் வைத்தியர்கள் துரிதமாக செயல்பட்டபோதும் உரியவரின் உயிர் பிரிந்தது. இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.