செய்தி இணையத்தளங்களைப் பதிவு செய்வதற்கான கட்டணம் குறைப்பு

இலங்கையில் புதிய செய்தி இணையத்தளங்களை பதிவு செய்வதற்கான கட்டணத்தை ஒரு லட்சம் ரூபாவிலிருந்து 25,000 ரூபாவாக குறைப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.அத்துடன் வருடாந்த புதுப்பித்தல் கட்டணம் 10,000 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக ஊடகப் பேச்சாளரான பேச்சாளரான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

புதிய செய்தி இணையத்தளங்களை பதிவு செய்வதற்கு ஒரு லட்சம் ரூபாவை கட்டணமாக அறவிடுவதற்கும் இத்தகைய இணையத்தளங்களுக்கான வருடாந்த புதுப்பித்தல் கட்டணமாக 50,000 ரூபாவை அறவிடுவதற்கும் அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளதாக கடந்த ஜூலை மாதம் 31 ஆம் திகதி அரசாங்கம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், இக்கட்டணங்களை முறையே 25,000 மற்றும் 10,000 ரூபாவாக குறைப்பதற்கு தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts