Ad Widget

செய்தியாளர் எழுப்பிய கேள்வியால் கோபமுற்ற டோனி

வங்காளதேச அணியை வென்ற பின் செய்தியாளர்கள் சந்திப்புக்கு புன்னகையுடன் வந்த டோனியிடம் கேட்கப்பட்ட முதல் கேள்வி ஆச்சரியத்துடன் ஆத்திரத்தையும் கிளப்பும் வகையில் அமைந்தது. நேற்று நடந்த போட்டியில், அதிக ரன் விகிதத்துடன், அரையிறுதி வாய்ப்பினை பிரகாசிக்க செய்யும் வகையில் இந்திய அணி விளையாடி இருக்க வேண்டும் என்பதை குறிக்கும் வகையில், செய்தியாளர் ஒருவர், இந்த முடிவில் நீங்கள் எப்படி திருப்தி கொள்கிறீர்கள்? என கேள்வி எழுப்பினார்.

இதனால் எரிச்சலுற்ற டோனி, இந்தியா இன்று வெற்றி பெற்றதில் உங்களுக்கு மகிழ்ச்சியில்லை என எனக்கு தெரியும் என கூறினார். உடனே, விளக்கமளிக்க செய்தியாளர் முற்பட, அதனை இடைமறித்த டோனி, நான் சொல்வதை கவனியுங்கள். உங்களது குரல், உங்களது கேள்வி மற்றும் நீங்கள் இந்தியா வெற்றி பெற்றதில் மகிழ்ச்சியடையவில்லை என தெளிவாக தெரிகிறது.

ஒரு கிரிக்கெட் போட்டி பற்றி பேசும்பொழுது, அதற்கு விரிவுரை இல்லை. இது விரிவுரை குறித்த விசயமும் இல்லை என கூறினார். அதன்பின் செய்தியாளரை நிம்மதியடைய செய்யும் வகையில் பேசிய டோனி, டாஸை இழந்தபின், எங்களால் ரன்களை சேர்க்க முடியாததற்கு என்ன காரணம் என நீங்கள் ஆய்வு செய்திருக்க வேண்டும். இத்தகைய விசயங்களை நீங்கள் வெளியே அமர்ந்து ஆய்வு செய்யவில்லை எனில் இந்த கேள்வியை நீங்கள் கேட்க கூடாது என கூறினார்.

இதனை தொடர்ந்து அடுத்த கேள்வியை கேட்பதற்காக யாரும் முன்வராத நிலையில் செய்தியாளர்கள் அறையில் நீண்ட நிசப்தம் நிலவியது. அரையிறுதி போட்டியில் தகுதி பெற வேண்டிய கட்டாய சூழலில், குறைந்த ரன்களே எடுத்து ஒரு ரன் வித்தியாசத்தில் தப்பி பிழைத்து இந்தியா வெற்றி பெற்றது.

வங்காளதேச அணி வெற்றி பெற 146 என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து விளையாடிய அந்த அணி 9 விக்கெட்டுகள் இழந்த நிலையில் 145 ரன்களுக்குள் கட்டுப்படுத்துவதற்கு கடைசி 2 ஓவர்களில் இந்தியா கடுமையாக போராட வேண்டி இருந்தது. என்பதுவும் குறிப்பிடத்தக்கது

Related Posts