யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் முழங்கைக்கு கீழ் கைகளை இழந்தவர்களுக்கு யாழ்ப்பாணம் றோட்டறிக் கழகம் செயற்பாட்டு திறனுடைய செயற்கைக் கை வழங்கும் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைபொருத்தும் நடவடிக்கைகள் கல்லூரி வீதி , நீராவியடி , யாழ்ப்பாணம் எனும் முகவரியில் அமைந்துள்ள இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் நாளை வெள்ளிக்கிழமையும் மறுநாள் சனிக்கிழமையும் காலை 9.00 மணி முதல் மாலை 4 மணிவரை நடைபெறவுள்ளது.
அவுஸ்திரேலியா றோட்டறிக்கழக உறுப்பினர்களான வைத்திய நிபுணர்களால் கைகள் பொருத்தப்படவுள்ளன.
முழங்கைக்கு கீழ் ஆகக்குறைந்தது 10 சென்ரிமீற்றர் நீளத்துக்கு கை இருக்க வேண்டும்.
இவ்வாறு பொருத்தப்படும் கைகள் வினைத்திறனுடன் செயலாற்றக் கூடியன. தமது இயல்பான செயற்பாடுகளை குறித்த கையைப் பயன்படுத்தி செயற்படுத்த முடியும்.
பதிவுகளின்படி முன்னுரிமையின் அடிப்படையிலேயே கைகள் பொறுத்தப்படவுள்ளது. கைகளைப் பொருத்திக் கொள்ளவிரும்புபவர்கள் பதிவுகளை மேற்கொள்ளலாம். குறித்தளவு கைகளே இந்த இரு தினங்களும் பொருத்த தயார்நிலையில் உள்ளதால் பதிவு செய்யப்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
மேலதிக விபரங்களுக்கு Rtn.PHF.S. கிஷோக்குமார் 077-3895395 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ள முடியும் என்றும் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.