செம்டெம்பர் 26ம் திகதி மாபெரும் இரத்த தான முகாம்! – யாழ் இந்துக்கல்லுாரி பழையமாணவர் சங்கம் அழைப்பு

யாழ்ப்பாணம் இந்துக் கல்லுாரியின் 125 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு செம்டெம்பர் 26ம் திகதி சனிக்கிழமை மாபெரும் இரத்த தான முகாம் ஒன்றினை  யாழ் இந்துக்கல்லுாரி யின் யாழ்ப்பாணம்  பழையமாணவர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது . காலை 9 மணிதொடக்கம் 3 மணிவரை இடம்பெறவுள்ள இந்த இரத்ததானத்தில் பங்குகொண்டு கல்லுாரிக்கும்  கல்லுாரிக்கு பெருமைசேர்த்தவர்களுக்கும் பெருமை சேர்க்குமாறு பழையமாணவர்சங்கம் விடுத்துள்ள  செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

முன்னதாக கல்லுாரியால் ஏற்பாடு செய்யப்பட்ட 125 வது ஆண்டு நிறைவிற்கான 4 நாள் விழாக்கொண்டாட்டங்களை புறக்கணித்துள்ள சங்கம் விழாக்கொண்டாட்டங்கள் ஏதுமற்ற நாளான பழையமாணவர்களினால் என்றும் மறக்கப்படடாத நாளான செப்டெம்பர் 26 ம்திகதியில் பழையமாணவர்கள் தங்கள் உதிரத் தானத்தால் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் என்று பழையமாணவர் சங்க பிரதிநிதி ஒருவர் எமது ஊடகத்திற்கு கருத்து தெரிவித்தார். ஒரு துளி உயிர்தரும் அன்னையின் புகழ் எழும் என்ற கோசத்தின் கீழ் அந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

jhcoba

Related Posts