சென்.பற்றிக்ஸ் கல்லூரி, திருக்குடும்பக் கன்னியர்மடம் சம்பியன்

basketballவடமாகாணப் பாடசாலைகளுக்கிடையில் இடம்பெற்ற கூடைப்பந்தாட்டப் போட்டிகளில் ஆண்களுக்கான போட்டியில் யாழ். சென். பற்றிக்ஸ் கல்லூரி அணியும், பெண்களுக்கான யாழ். திருக்குடும்பக் கன்னியர்மடமும் சம்பியனாகின.

வடமாகாணக் கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகள் 5 கட்டங்களாக இடம்பெற்று வருகின்றன.

முதலாம் மற்றும் இரண்டாம் கட்டப் போட்டிகள் முல்லைத்தீவு மாவட்டத்திலும், மூன்றாம் கட்டப் போட்டிகள் வவுனியா மாவட்டத்திலும் நடைபெற்று முடிந்த நிலையில் 4 ஆம் கட்டப் போட்டிகள் தற்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்றன.

இதில் 19 வயதுப்பிரிவு ஆண்கள், பெண்களுக்கான கூடைப்பந்தாட்டப் போட்டிகள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி கூடைப்பந்தாட்டத் திடலில் கடந்த 16 ஆம் திகதி முதல் இடம்பெற்று வந்தது.

19 வயதுப்பிரிவு ஆண்களுக்கான போட்டியில் சென். பற்றிக்ஸ் கல்லூரி அணி முதலிடத்தினையும், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணி இரண்டாமிடத்தினையும், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி மூன்றாமிடத்தினையும் பெற்றுக் கொண்டன.

19 வயதுப்பிரிவு பெண்களுக்கான போட்டியில் யாழ். திருக்குடும்பக் கன்னியர்மடம் முதலிடத்தினையும், மருதனார்மடம் இராமநாதன் மகளிர் கல்லூரி அணி இரண்டாமிடத்தினையும், கொக்குவில் இந்துக் கல்லூரி அணி மூன்றாமிடத்தினையும் பெற்றன.

Related Posts