யாழ்ப்பாண சென்.ஜோன் கல்லூரியில் க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான தொழில்நுட்ப பிரிவை ஆரம்பிப்பதற்கான உத்தியோகபூர்வ அனுமதி வழங்கப்பட்டுள்ளது
கல்வி இராஜாங்க அமைச்சு இவ் அனுமதியை வழங்கியுள்ளது. இந்த பாடத்திட்டத்துக்கான கட்டடத்தை பாடசாலை நிர்வாகம் தனது சொந்த பணத்தில் அமைக்கவுள்ளதுடன் அதற்கான பொருட்களையும் தனது சொந்த நிதியிலே பெறவுள்ளது.
இந்த திட்டத்துக்காக 60 மில்லியன் ரூபாய் செலவு செய்யப்படவுள்ளதாக பாடசாலையின் அதிபர் வணக்கத்துக்குரிய ந.ஜோ.ஞானப் பொன்ராஜா தெரிவிக்கின்றார்.
30 மில்லியன் ரூபாய் கட்டடத்துக்காகவும் மிகுதி 30 மில்லியன் ரூபாய் உபகரணங்களுக்காகவும் செலவு செயப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த பாடத்திட்டத்தில் பொறியியல், தொழில்நுட்பவியல் மற்றும் உயர்முறையிலான தொழில்நுட்பவியல் ஆகிய பாடங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.