சென்னை வெள்ளத்தினால் ஈழ தமிழர்கள் பாதிப்பு

இந்திய சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் ஈழ தமிழர்கள் பெரும் பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளனர்.

ஈழ தமிழர்கள் வசிக்கும் கே.கே.நகர், மடிப்பாக்கம், அண்ணாநகர், திருவான்மியூர், கொட்டிவாக்கம், நெசப்பாக்கம், போரூர், உள்ளிட்ட பகுதிகளிலும், வெள்ளத்தினால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதுடன் பலர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் தொலைபேசித் தொடர்புகள் பாதிக்கப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.

அதேவேளை, சென்னை வெள்ளத்தினால் ஈழ தமிழர்கள் பாதிக்கப்பட்டமைக்கான தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை என சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் ஈழ தமிழர்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருந்தால், சிறிலங்கா தூதரகத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய தர்மபால, 0091-9962627956, இந்திரக்க 0091-9444010999 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts