சென்னையில் 50 வீடுகளை கடல் காவுகொண்டுள்ளது!

சென்னையின் பட்டினப்பாக்கம் கடற்கரையில் கடலின் சீற்றம் அதிகரித்ததோடு நீரின் மட்டமும் உயர்ந்து வந்தது. இதனையடுத்து கடற்கரையில் அமைந்துள்ள 50 வீடுகளை கடல் அடித்துச் சென்றுள்ளது. மேலும் பல வீடுகள் சேதமடைந்துள்ளன. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் இடம்பெயர்ந்து வேறு இடங்களுக்குச் சென்றுவிட்டனர்.

india_people_complaint_see-home

பட்டினப்பாக்கம் கடற்கரையில் உள்ள ஸ்ரீநிவாஸபுரம் என்ற இடத்திலேயே கடந்த ஞாயிற்றுக்கிழமையிலிருந்து கடலின் நீர்மட்டம் உயர்ந்ததோடு அலையும் சீற்றம் அருகிலுள்ள வீடுகளை மோதி பெருமளவு சேதத்தை உண்டுபண்ணியது.

இந்தச் சம்பவம் குறித்து ஸ்ரீநிவாஸபுரம் மீனவ பஞ்சாயத்துத் தலைவர் சுரேஷ் கருத்துத் தெரிவிக்கும்போது,

படகுகள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன் வலைகள் அனைத்தும் மண்ணுக்குள் மூடப்பட்டு விட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

2009ஆம் ஆண்டும் இவ்வாறு கடல் சீற்றம்கொண்டு பல வீடுகள் அழிந்துள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

சென்னை மட்டுமல்லாமல், குமரி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இதேபோல பல இடங்களில் கடல் நீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. தென்மேற்குப் பருவமழை பெய்யும் காலகட்டத்தில் இதுபோல, கடல் நீர்மட்டம் உயர்வது இயல்பானது என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருக்கிறது.

ஆனால், கடந்த ஆண்டுகளைப் போலல்லாமல் கடல் நீர் பல மீற்றர்கள் உள்ளே புகுந்துள்ளதால் அப்பகுதியில் வசிப்பவர்கள் தொடர்ந்தும் அச்சத்திலேயே உள்ளனர்.

Related Posts