சென்னையில் வௌ்ளத்தில் சிக்கியுள்ள இலங்கையர்களை அழைத்துவர விஷேட விமானம்

சென்னையில் மழை வௌ்ளத்தில் சிக்கியுள்ள இலங்கையர்களை விஷேட விமானம் மூலம் நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலையால் புத்தகயாவிற்கு வழிபாட்டிற்கு சென்ற 120 இலங்கையர்கள் இவ்வாறு சிக்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களை அழைத்து வருவதற்கான விஷேட விமானம் நாளை ஞாயிற்றுக்கிழமை இந்தியாவின் காயா நோக்கி புறப்படவுள்ளதாக இலங்கை விமான சேவைகள் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி தெரிவித்துள்ளார்.

Related Posts