சென்னையில் விபத்தில் சிக்கிய இலங்கைப் பெண் பலி!

சென்னை பாரிமுனை பகுதியில் ஏற்பட்ட கார் விபத்தில் சிக்கி இலங்கை பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். சென்னைக்கு குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றிருந்த நிலையில், வாடகை காரின் மூலம் டி நகரிலிருந்து மண்ணடி நோக்கி பயணித்தவேளை கட்டுப்பாட்டை இழந்த கார் சுமார் 20 அடி பள்ளத்தில் விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளதாகவும், விபத்து காரணமாக காரில் பயணம் செய்த 4 பேர் படுகாயமடைந்துள்ளதுடன், 54 வயதான ரித்வியா என்றப்பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விபத்தில் படுகாயமடைந்தவர்கள் 34 வயதான மொஹமட் ஆசாத் ரபாட், மொஹமட் அஜ்மல் மற்றும் ஜிமா நஸாட் அம்ஜல் மற்றும் காரின் சாரதி என யானைகவனி பிரதேச பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் காயமடைந்த 4 பேரும் சென்னை ராஜீவ்காந்தி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், மேலதிக விசாரணைகளை யானைகவனி பொலிஸார் தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts