சென்னையில் மீண்டும் மழை: கலக்கத்தில் மக்கள்!

சென்னையில் நேற்று பின்னிரவில் இருந்து லேசாக வெளுக்கத் தொடங்கிய வானம், இன்று பிற்பகலில் இருந்து மேகப்போர்வையை போர்த்திக் கொண்டது.

சுமார் ஒருவாரத்துக்குப் பிறகு பல இடங்களில் வெள்ளநீர் வடிந்து வருவதையும், பஸ், ரெயில் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து ஆங்காங்கே இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருப்பதையும் கண்டு மகிழ்ச்சியடைந்த மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக இன்று பிற்பகல் 3 மணியளவில் சென்னையில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது.

குறிப்பாக, எழும்பூர், மைலாப்பூர், தேனாம்பேட்டை, விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் அடர்த்தியான கருமேகங்கள் திரண்டு பலத்த மழை பெய்யத் தொடங்கியுள்ளது.

இந்த மழை தொடர்ந்து கனமழையாக நீடித்தால் தங்களது நிலைமை என்னவாகுமோ..,? என்ற கலக்கத்தில் சென்னை மக்கள் உறைந்துப்போய் உள்ளனர்.

Related Posts