சென்­னையில் 229 பேருக்கு எபோலா பரி­சோ­தனை

எபோலா’ நோயின் தாக்கம் கார­ண­மாக சென்னை விமான நிலை­யத்தில் சுகா­தார துறை அதி­கா­ரிகள் ஆ­பி­ரிக்க நாடு­களில் இருந்து வரு­ப­வர்கள் தொடர்பில் தீவிர கண்­கா­ணிப்பில் ஈடுப்­பட்டு வரு­கி­றார்கள்.

ebola-virus

4 ஆபி­ரிக்க நாடு­களில் இருந்து சமீ­பத்தில் தமிழ்­நாடு திரும்­பிய 229 பேர் எபோலா நோய் கண்­கா­ணிப்பில் இருப்­ப­தாக சுகா­தார துறை தெரி­வித்து உள்­ளது. இதில் 2 பேர் மதுரை வந்­த­வர்கள். மீதி­யுள்ள 227 பேர் சென்னை விமான நிலை­யத்­துக்கு வந்து இறங்­கி­ய­வர்களாவர். இதில் 11 பேர் கல்­லூரி மாண­வர்கள். 222 பேர் நைஜீ­ரியா நாட்­டுக்கு சென்று வந்­த­வர்கள் அவர்கள் கினி­யாவில் இருந்து 5 பேரும் லைபி­ரியா, சியா­ரா­லியோன் ஆகிய நாடு­களில் இருந்து தலா ஒரு­வரும் வந்து உள்­ளனர்.

ஆபி­ரிக்கா நாடு­களில் இருந்து வந்த கல்­லூரி மாண­வர்கள் உட்­பட இந்த 229 பய­ணிகள் ஒரு­மாதம் கண்­கா­ணிப்பில் வைக்­கப்­பட உள்­ளனர். சியாரா லியோவில் இருந்து நாடு திரும்­பிய ஒருவர் ஒரு மாதம் எபோலா நோய் கண்­கா­ணிப்பில் இருந்தார். 30 தினங்கள் கண்­கா­ணிப்பு முடிந்த பிறகு அவரை சுகா­தார துறை விடு­வி­டுத்­துள்­ளது.

மேற்கு ஆபி­ரிக்க நாடு­க­ளான நைஜீ­ரியா, லைபி­ரியா, சியரா லியோன், கினியா ஆகிய நாடு­களில் ‘எபோலா’ எனும் கொடிய உயிர்­கொல்லி நோய் பரவி வரு­கி­றது. இந்த நோய்க்கு இது­வரை 1,400 பேர் பலி­யாகி உள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.இந்த நோய்க்கு இது­வரை மருந்து கண்­டு­பி­டிக்­கப்­ப­ட­வில்லை. எனவே இந்த நோயை பரவாமல் தடுக்க சர்வதேச நாடுகள் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.

Related Posts