சூர்யா மீது போலீஸில் புகார்!

சென்னை அடையாறு திரு.வி.க. மேம்பாலத்தில் நேற்று முன்தினம் நடிகர் சூர்யா, வாலிபர் ஒருவரை கன்னத்தில் அறைந்த செய்தி நேற்று பரபரப்பாக பேசப்பட்டது.

சூர்யாவிடம் அடிவாங்கிய அந்த வாலிபர் சாஸ்திரிநகர் போலீஸ் நிலையத்தில், நடிகர் சூர்யா தன்னை நடுரோட்டில் வைத்து தாக்கியதால் அவமானம் ஏற்பட்டுவிட்டதாகவும், அதனால் தான் தற்கொலை செய்து கொண்டால் அவர் தான் காரணம் என்றும், உடனே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் மனு அளித்து இருந்தார்.

இந்த நிலையில், சாஸ்திரி நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்த அந்த வாலிபர் நேற்று புகாரை வாபஸ் பெற்றுக்கொண்டார். அந்த வாலிபர் புகாரை திரும்ப பெறுவதற்கு முன்பாக, சென்னையில் தனியார் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் வைத்து, நடிகர் சூர்யா அவருடைய தந்தை சிவகுமார் மற்றும் வக்கீல் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

Related Posts