சூர்யா-சமந்தாவின் ’24’ குடும்பத்துடன் பார்க்கலாம்

சூர்யா, சமந்தா, நித்யாமேனன், சரண்யா பொன்வண்ணன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ’24’. விக்ரம் குமார் இயக்கியிருக்கும் இப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்திருக்கிறது. ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனமும், ஈரோஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் இணைந்து இப்படத்தை உலகம் முழுவதும் வெளியிடுகிறது.

24-soorya-samantha

இந்நிலையில் இப்படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் குடும்பத்துடன் பார்க்கும் வகையில் ‘யூ’ சான்றிதழை வழங்கியிருக்கின்றனர்.

‘யூ’ சான்றிதழ் பெற்றதன் மூலம் இப்படத்திற்கு தமிழக அரசின் 30% வரிவிலக்கு கிடைக்கும் என்பதால், சூர்யா உள்ளிட்ட படக்குழுவினர் தற்போது மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர்.

தமிழ், தெலுங்கு என 2 மொழிகளிலும் மே 6 ம் தேதி இப்படம் வெளியாகிறது. சூர்யாவின் திரையுலக வரலாற்றில் முதன்முறையாக ’24’ திரைப்படம் அதிக திரையரங்குகளில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

Related Posts