சூர்யாவை பின்னுக்குத் தள்ளிய சன்னி லியோன்…

இப்போதெல்லாம் ஒரு படம் தியேட்டரில் நன்றாக ஓடுகிறதோ இல்லையோ, யு டியூப்பில் நன்றாக ஓடினாலே அந்தப் படம் வெற்றி பெற்றுவிடும் என சிலர் நம்புகிறார்கள். யு டியூப்பில் அதிகம் பேர் பார்த்துவிட்டார்கள் என்பதெற்கெல்லாம் வேறு விழா எடுக்கிறார்கள்.

surry-sunny

‘அஞ்சான்’ படத்திற்கு இப்படி ஒரு விழா நடந்தது ஆச்சரிய அலைகளை ஏற்படுத்தியது. சமீபத்தில் இந்திய அளவில் பரபரப்பாக பேசப்பட்ட இரண்டு யு டியூப் ஹிட்ஸில் ஒன்று ‘அஞ்சான்’ பட டீஸர், அடுத்தது சன்னி லியோன் பங்கேற்ற ‘பின்க் லிப்ஸ்’ என்ற பாடலின் வீடியோ.

சன்னி லியோன் நடித்து விரைவில் வெளிவர உள்ள ‘ஹேட் ஸ்டோரி 2′ என்ற படத்தில்தான் இந்த ‘பின்க் லிப்ஸ்’ வீடியோ பாடல் இடம் பெற்றுள்ளது. கடந்த 2ம் தேதி வெளியிடப்பட்ட இந்தப் பாடலை இதுவரை 23 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.

ஆனால், கடந்த 5ம் தேதி வெளியிடப்பட்ட ‘அஞ்சான்’ டீஸரை இதுவரை 21 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மட்டுமே பார்த்துள்ளனர். இந்திய அளவில் இந்த இரண்டு வீடியோக்களும்தான் ஒன்றுக்கொன்று போட்டி போட்டு வருகின்றன.

இளைஞர்களால் பெரிதும் கவரப்பட்ட சன்னி லியோன், சூர்யாவை பின்னுக்குத் தள்ளியதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. அடுத்தடுத்த நாட்களில் யார் யாரை மிஞ்சுகிறார்கள் என கடும் போட்டி நிலவ வாய்ப்புள்ளது.

இருந்தாலும் ‘ஹேட் ஸ்டோரி 2′ படக்குழுவினர் ‘அஞ்சான்’ டீசருக்கு விழா எடுத்ததுபோல் எந்த விழாவையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts