சூர்யாவை கண்டு தெலுங்கு ஹீரோக்களுக்கு பயம்: நாகார்ஜுனா

கார்த்தி, தமன்னா, நாகார்ஜுனா நடித்த ‘தோழா’ படத்தின பாடல் வெளியீட்டு விழாவில் நாகார்ஜுனா பேசிய பேச்சு அனைவரையும் கவர்ந்தது. சூர்யா படத்தை கண்டு தெலுங்கு ஹீரோக்கள் பயந்து, தங்கள் பட வெளீட்டை தள்ளி வைக்கிறார்கள் என்றார்.

nagarjoona-soorya

விழாவில் அவர் பேசியதாவது:

நான் சென்னையில் பிறந்தவன். எனவே நானும் சென்னைக்காரன் தான். இந்தப் படத்தில் நடித்தது சிறப்பான அனுபவம் . கார்த்தியும் நானும் மனதளவில் இந்தப் படத்துக்குப் பிறகு மிகவும் நெருங்கி விட்டோம் . படத்தில் நான் முழுக்க சக்கர நாற்காலியிலேயே உட்கார்ந்து இருக்கும் கேரக்டர். என்னை உட்கார வைத்துவிட்டு கார்த்தியும் தமன்னாவும் நிறைய டான்ஸ் ஆடி இருக்கிறார்கள். அப்போது எனக்கும் எழுந்து ஆட வேண்டும் போல இருக்கும்.

இன்னொரு விஷயம் உங்களுக்கு தெரியுமா ? சூர்யாவுக்கு ஆந்திராவில் ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு . குறிப்பாக தெலுங்கானாவில் இருக்கும் ரசிகர் படை அவரது தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு கொஞ்சமும் சளைத்தது அல்ல . சூர்யாவின் படம் தெலுங்கில் டப்பிங் ஆகி வருகிறது என்றால் தெலுங்கு ஹீரோக்கள் பயந்து போய் தங்கள் படத்தின் ரிலீசை தள்ளி வைப்பார்கள் . அவ்வளவு பெரிய மாஸ் அவர் . அவரது அடுத்த படம் 24 க்கு என்னுடைய வாழ்த்துகள் ” என்றார்

Related Posts