சூர்யாவை ஒருதலையாக காதலிக்கும் ஸ்ருதிஹாசன்!

சிங்கம்-2 படத்தில் பள்ளி மாணவியாக நடித்தார் ஹன்சிகா. கதைப்படி அந்த பள்ளியில் என்சிசி ஆசிரியராக இருப்பார் சூர்யா.

soorya-shuruthy

அப்போது சூர்யா மீது காதல கொள்ளும் ஹன்சிகா, ஒரு கட்டத்தில் தனது காதலை சொல்லும்போது, தனது காதலி அனுஷ்காவையே தான் கல்யாணம் செய்து கொள்ளப்போவதாகவும், அவர் தனக்காகவே காத்துக்கொண்டிருப்பதாகவும் சொல்வார் சூர்யா. அதையடுத்து தனது மனதை மாற்றிக்கொள்வார் ஹன்சிகா.

அதேபோல் இப்போது சிங்கம்-3யான எஸ்-3 படத்திலும் முந்திய பாகத்தில் நடித்த ஹன்சிகாவைப்போன்று ஸ்ருதிஹாசனும் நடிக்கிறார். ஆனால் அவர் ரகசிய போலீசாக நடிக்கிறார்.

காவல்துறையின் உயரதிகாரியான சூர்யாவுக்கு உதவி செய்யும் வேடம். மேலும், சூர்யாவின் திறமையைக்கண்டு வியந்து அவர் மீது ஒருதலையாக காதல் கொள்வாராம் ஸ்ருதிஹாசன்.

அந்த வகையில் சூர்யா-ஸ்ருதிஹாசனுக்கிடையே ஒரு டூயட் பாடலும் உள்ளதாம். அதோடு, இந்த படத்தைப்பொறுத்தவரை ரகசிய உளவாளியான ஸ்ருதிஹாசனுக்கு ஒரு ஆக்சன் காட்சியும் உள்ளதாம்.

Related Posts