சூர்யாவுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்!

இந்தியாவின் டாப்-10 படங்களில் சூர்யா நடிப்பில் வெளியான ’24’ படமும் இடம்பெற்றுள்ளது.

”IMDb” எனப்படும் The Internet Movie Database தளமானது, திரைப்படங்கள் குறித்த தகவல்களை மக்களுக்கு அளித்து வரும் ஒரு சர்வதேச இணையதளமாகும்.

2016-ஆம் ஆண்டின் டாப்-10 இந்திய படங்களை IMDb இணையதளம் சமீபத்தில் வெளியிட்டது. இந்த பட்டியலில் சூர்யா நடிப்பில் வெளியான 24 படமும் இடம்பெற்றுள்ளது.

இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே தமிழ் படம் 24 மட்டும்தான்.

இந்த தகவலை சூர்யாவின் படத் தயாரிப்பு நிறுவனமும்,24 படத்தின் தயாரிப்பாளருமான 2டி எண்டர்டெயிண்மெண்ட் நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளது.

Related Posts