மைக்கை பிடித்து பாட்டு பாடியே பல வெள்ளிவிழா படங்களை கொடுத்தவர் மோகன். கமலஹாசன் சாயலில் பெங்களூரில் இருந்து வந்து ஒரு கலக்கு கலக்கியவர்.
திடீரென அவர் மார்க்கெட் முடிவுக்கு வந்தது. அவரும் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று ஒற்றக் காலில் நின்று பல வருடங்கள் நடிக்காமலேயே இருந்தால். சில வருடங்கள் எங்கிருக்கிறார் என்று தெரியாமலும் இருந்தார். இதனால் அவரைப் பற்றி பல தவறான வதந்திகளும் பரவியது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு சுட்டபழம் என்ற ஒரு படத்தில் நடித்தார். படு கவர்ச்சிப் படமான அது ஓடவில்லை. அதனால் மீண்டும் சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு உலக பட விழாக்களில் சுஹாசினி, பூர்ணிமாக ஆகியோருடன் இணைந்து பணியாற்றினார்.
இப்போது சூர்யாவை வைத்து வெங்கட்பிரபு இயக்கும் படத்தில் மோகன் வில்லனாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை (பேய், பூச்சாண்டி என்று சொல்கிறார்கள்).
ஹீரோயினை ஒரு தலையாய் காதலித்து தற்கொலை செய்து கொள்ளும் ஒருவன் ஆவியாக வந்து நிஜமாக காதலிப்பவனுக்கு டார்ச்சர் கொடுத்து காதலை கெடுக்கிற மாதிரியான கதையாம்.
இதில் அந்த ஆவியாக நடிக்கத்தான் மோகனை பேசி வருவதாக கூறப்படுகிறது. கதையை கேட்டுக் கொண்ட மோகன் ஓகே சொல்வதற்காக கொஞ்சம் டயம் கேட்டிருக்கிறாராம்.