தான் இயக்கும் படங்களில் ரஜினி படமாக இருந்தாலும் பாடல் காட்சிகளிலாவது நடித்து விடுவதை வழக்கமாகக் கொண்டு வந்தவர் கே.எஸ்.ரவிக்குமார். அந்த வகையில், அதேபோல் மற்ற இயக்குனர்களின் படங்களிலும் அவ்வப்போது நடித்து வந்த அவர், சமீபகாலமாக நடிப்பில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். குறிப்பாக, முடிஞ்சா இவனை புடி படத்தை இயக்கிய பிறகு டைரக்சனைப்பற்றி யோசிக்காமல் நடிப்பதில் முழுகவனத்தையும் திருப்பிவிட்டார் கே.எஸ்.ரவிக்குமார்.
அந்த வகையில், சிகரம் தொடு, ஆடாம ஜெயிச்சோமடா, தங்கமகன் படங்க ளுக்குப்பிறகு ரெமோ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாகவும், றெக்க படத்தில் விஜயசேதுபதிக்கு அப்பாவாகவும் நடித்துள்ள கே.எஸ்.ரவிக்குமார், அடுத்தபடியாக விக்னேஷ்சிவன் இயக்கத்தில் சூர்யா-நயன்தாரா ஜோடி சேரும் படத்தில் சூர்யாவின் அப்பாக நடிக்கிறார். இந்த படத்தில் சூர்யாவின் அம்மாவாக சரண்யா நடிக்கிறார். மேலும், இந்த படத்தை நயன்தாரா தயாரிப்பதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில், இப்போது ஸ்டுடியோ கிரீன், 2டி ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து தயாரிப்பதாக கூறப்படுகிறது.