இது டுவிட்டர் காலம். அதனால் 2 மணி நேரம அல்லது அதிகபட்சமாக இரண்டே கால் மணி நேரத்தோடு படத்தின் நீளத்தை நிறுத்திக்கொள்ளுங்கள் அதற்கு மேல் ரசிகர்கள் தியேட்டரில் உட்கார மாட்டார்கள் என்று விஜய், அஜீத் உள்ளிட்ட பிரபல ஹீரோக்களே தங்களது இயக்குனர்களுக்கு ஆர்டர் போட்டு வருகிறார்கள்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், சித்தார்த் நடித்த ஜிகர்தண்டா கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஓடக்கூடிய படமாக வந்துள்ளது. இந்த நீளம் ரசிகர்களுக்கு போரடித்து விடுமோ என்ற அச்சம் ஆரம்பத்தில் அவர்களுக்கு இருந்தது. ஆனால் இப்போது ரசிகர்களிடமிருந்து அதுபற்றிய கமெண்டு எதுவும் வராததால் அப்படியே விட்டுவிட்டனர்.
அதனால் 3 மணி நேரம் வரை எடுக்கப்பட்டுள்ள அஞ்சான் படத்தை கடைசி நேரத்தில் தேவையில்லாத காட்சிகளை கத்தரிக்க வேண்டும் என்று நினைத்திருந்தவர்கள், இப்போது அதெல்லாம் தேவையில்லை என்று அப்படியே ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளனர்.
காரணம், ஏற்கனவே சூர்யா நடித்த சிங்கம் படத்தைப்போன்று இப்படமும் அதிரடியான ஆக்சன் கதையில் உருவாகியிருப்பதால், கதை படு ஸ்பீடாக நகர்த்தப்பட்டுள்ளதாம். அதனால், கதையோடு நகரும் ரசிகர்களுக்கு படத்தின் நீளமே தெரியாத அளவுக்கு கதையோட்டம் இருக்கும் என்கிறார்கள்.