தமிழ் சினிமாவின் நிரந்தர சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினிகாந்த் மட்டுமே, ஆனால், இவரின் கோச்சடையான், லிங்கா படங்கள் தோல்வி இவரை மிகவும் பாதித்துள்ளது.
இதனால், அடுத்த படத்தில் கண்டிப்பாக ஹிட் கொடுத்து விட வேண்டும் என முடிவெடுத்துள்ளார். இவர் அடுத்து அட்டக்கத்தி ரஞ்சித் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால், இப்படத்தில் ரஜினி நடிப்பதில் ஒரு சிக்கல் எழுந்துள்ளது, ஏனெனில் ரஞ்சித் மெட்ராஸ் படம் முடிந்தவுடன், ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் சூர்யாவுடன் ஒரு படத்தில் இணைவதாக இருந்தார்.
இந்நிலையில் ரஜினி படத்தில் கமிட் ஆனது சூர்யா தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனால், ரஞ்சித்-ரஜினி படம் கேள்விக்குறியாகியுள்ளது.