Ad Widget

சூரிய சக்தியின் துணையுடன் உலகம் சுற்றும் விமானம்

சூரியசக்தியில் இயங்கும் விமானம் ஒன்று உலகைச் சுற்றிவரும் அதன் ஐந்து மாதப் பயணத்தில் முதல்கட்டத்தில் உள்ளது.

solar_plane

ஒரு துளி எரிபொருளையும் பயன்படுத்தாமல் தனியே சூரிய சக்தியை மட்டுமே கொண்டு இந்த விமானம் இயங்கக்கூடியது.

சோலார் இம்பல்ஸ் டூ- என்ற பெயருடைய இந்த விமானம் தனியொரு நபர் மட்டுமே அமர்ந்து பயணிக்கக்கூடியது.

அபு தாபியிலிருந்து ஒமான் நோக்கி சோலார் இம்பல்ஸ்-2 பயணத்தைத் தொடங்கியது.

பெரிய கார் ஒன்றை விஞ்சாத பாரத்தில் அமைந்துள்ள இந்த விமானத்தின் இரண்டு இறக்கை ஜம்போ ஜெட் ஒன்றின் அளவை ஒத்துள்ளன.

இந்த இறக்கைகளில் தான் சோலார்- சூரிய சக்திக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

பேட்ராண்ட் பிக்கார்ட் மற்றும் அன்ரூ போர்ஸ்ச்பர்க் ஆகிய இரண்டு விமானிகளும் மாறிமாறி விமானத்தை ஓட்டவுள்ளனர்.

11 இடங்களில் இந்த விமானம் இடைக்கிடையே நிறுத்தப்பட்டு பயணத்தைத் தொடரவுள்ளது.

சூரிய சக்தி போன்ற மாற்று இயற்கை வள சக்திகளை எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பதைக் காட்டுவதே தமது நோக்கம் என்று விமானி பிக்கார்ட் கூறினார்.

Related Posts