சூரிய கிரகணத்தை அவதானிக்க யாழில் சிறப்பு முகாம்கள்!

வட இலங்கை சூரிய கிரகணத்தை அவதானிக்கும் அரிய வாய்ப்பினை எதிர்வரும் 26ஆம் திகதி பெற்றுக்கொள்ளவுள்ளது.

சூரிய கிரகணத்தை அவதானிப்பதற்கான சிறப்பு முகாம்கள் யாழ். பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் அமைக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழகத்தின் தகுதிவாய்ந்த அதிகாரி, பேராசிரியர் கே.கந்தசாமி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகமானது கொழும்பு பல்கலைக்கழகம், மேற்குநோர்வே பிரயோக விஞ்ஞான பல்கலைக்கழகம், விஞ்ஞான தொழில்நுட்பவியல் மற்றும் ஆராய்ச்சி அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் சூரிய கிரகண அவதானிப்பு முகாம்களை அமைக்க திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts