சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பத்ம விபூஷண் விருது

மக்களின் நடிகராகவே தமிழ்த் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருந்து வருபவர் ரஜினிகாந்த். மிகப் பெரிய விருதுகளையோ, திரைப்பட விருதுகளையோ வாங்கியதில்லை.

இந்திய அரசாங்கத்தின் பத்மபூஷன் விருது அவருக்கு 2000ம் ஆண்டு வழங்கப்பட்டது. அது தவிர சில தனியார் விருதுகளும், சில குறிப்பிட்ட திரைப்பட விருதுகளை வாங்கியிருக்கிறார்.

இந்த வருடம் குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகள் அளிக்கப்பட உள்ளன.

அதில் ரஜினிகாந்திற்கு நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருது வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Related Posts