சூப்பர் சிங்கர் பாடகர்களை வைத்து யாழ்ப்பாணத்தில் வாக்கு வேட்டையாடும் சிங்களக் கட்சி!

யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த ஐக்கிய தேசியக் கட்சியின் பிரசாரக் கூட்டத்தில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ஈழத்தமிழர்கள் மத்தியில் பிரபலமான பாடகர்கள் சிலரும் பங்கேற்றிருந்தது, புலம் பெயர் தமிழர்கள் மற்றும், ஈழத்தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் காலூன்ற முனையும் சிங்களப் பேரினவாதக் கட்சி ஒன்றுக்கு ஆதரவான பிரசாரக் கூட்டத்தில் சூப்பர் சிங்கர் பங்கேற்றமைக்கு பரவலாக எதிர்ப்புக் கிளம்பத் தொடங்கியுள்ளது.

தமிழ்த் தேசியத்தைச் சிதைக்கும் வகையில் செயற்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவின் பிரசாரக் கூட்டத்திலேயே இவர்கள் தோன்றியிருந்தனர்.

vjayakala-supper-singer-1

vjayakala-supper-singer-2

vjayakala-supper-singer-3

Related Posts