Ad Widget

சூடுபிடிக்கும் விற்பனையில் உலகின் முதல் கறுப்பு ஐஸ்கிறீம்!

அமெரிக்காவின் நியூயோர்க்கில் விற்பனைக்கு வந்திருக்கிறது கறுப்பு ஐஸ்கறீம். தேங்காய்ப் பால், தேங்காய் கிறீம், தேங்காய்த் தூள், தேங்காய்க் கரி கலந்த மிகச் சுவையான ஐஸ்கிறீம் இது.

black-iceceam

கோப்பி, சொக்லேட் சுவையை விட வித்தியாசமான சுவையில் உருவாக்க வேண்டும் என்று முடிவெடுத்தனர். தேங்காயின் சாம்பலை ஐஸ்கிறீமுடன் கலந்தனர். சுவையும் நிறமும் இதில் இருந்துதான் கிடைத்தன.

விற்பனைக்கு வந்த உடனேயே தேங்காய் சாம்பல் ஐஸ்கிறீம் விற்பனையில் உச்சத்தைத் தொட்டுவிட்டது. வாடிக்கையாளர்களே சுவையில் மயங்கி, ஐஸ்கிறீமுக்கு இணையதளங்களில் விளம்பரம் செய்து வருகிறார்கள். தேங்காய் ஓடுகளை எரித்து, அதிலிருந்து கிடைக்கும் சாம்பலைப் பயன்படுத்துகிறார்கள்.

“தேங்காய் சாம்பல் உடலுக்கும் நல்லது. வித்தியாசமான சுவையாகவும் இருக்கிறது. பார்க்கவும் கண்களைக் கவர்கிறது. ஒரு தேங்காய் சாம்பல் ஐஸ்கிறீம் கோன் 8 டொலர்கள். (இலங்கை மதிப்பில் சுமார் 1160 ரூபாய்” என்கிறார் இதன் உரிமையாளர் மோர்கென்ஸ்டெர்ன்.

இந்த ஐஸ்கிறீமைச் சாப்பிட்ட பிறகு, சிறிது நேரம் வரை பற்களும் நாக்கும் கறுப்பாக இருக்குமாம்.

Related Posts