ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் புதிய தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நியமிப்பதற்கு கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதுவரை இறுதி முடிவுகள் வெளியாகவில்லை.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்தியக்குழு கூட்டம், முன்னாள்
ஜனாதிபதியும் கட்சியின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கொழும்பிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை கூடியுள்ள நிலையில் இந்த பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.மைத்திரிபால சிறிசேன பொது எதிரணி வேட்பாளராக மாறுவதற்கு முன்புவரை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளராக இருந்தமை குறிப்பிடத்தக்கது
இதேவேளை மேலும் 20 சுதந்திரக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் மைத்திரிபால சிறீசேனவின் அரசுக்கு தமது ஆதரவினை வழங்க முன்வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அதில் நிறைய மத்தியகுழு உறுப்பினர்களும் உள்ளடக்கம் என தெரியவருகிறது.சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களில் இல்லத்தில் நடைபெற்றுவரும் ஊடகவியலாளர் மாநாட்டில் தமது ஆதரவை இவர்கள் தெரிவிப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன
இதன் மூலம் பாராளுமன்றில் மைத்திரிபால சிறிசேனவின் தேசிய அரசுக்குரிய ஆதரவு பெருகிவருகிறது. வருகின்ற 19ம் திகதி பாராளுமன்றம் கூடும்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பெரும்பான்மையையினை நீரூபிக்கவேண்டியிருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.