சுஷ்மாவுக்கு ரணில் அமோக வரவேற்பு!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நேற்று சந்தித்து முக்கிய பேச்சுகளில் ஈடுபட்டார்.

ranil-susmaa

இரண்டு நாட்கள் பயணமாக இலங்கைக்கு நேற்று விஜயம் செய்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கிடையிலான சந்திப்பு அலரிமாளிகையில் நேற்றுப் பிற்பகல் இடம்பெற்றது. இதன்போது இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பில் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் உள்ளிட்ட தூதுக் குழுவினரும், இந்திய அரசின் சார்பில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா உள்ளிட்ட குழுவினரும் கலந்துகொண்டனர்.

இருநாட்டு உறவுகள், பாதுகாப்பு, மீனவர் பிரச்சினை, பொருளாதார மற்றும் வர்த்தக அபிவிருத்தி, கலாசாரம் உள்ளிட்ட மேலும் பல விடயங்கள் குறித்து இரு தரப்பினரும் இந்தச் சந்திப்பில் விரிவாகக் கலந்துரையாடினர்.

Related Posts