சுவிஸ் தூதுவர் வடமாகாண சபையின் அவைத்தலைவருடன் சந்திப்பு

cvk with swissவட மாகாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டு இன்று காலை யாழ்ப்பாணத்திற்கு வந்த இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் இன்று காலை 11 மணியளவில் வடக்கு மாகாண அவைத்தலைவரை சந்தித்து கலந்துரையாடினர்.

அதன்படி விஜயம் மேற்கொண்டிருந்த சுவிட்சர்லாந்து நாட்டின் இலங்கக்கான தூதுவர் தோமஸ் லிட்செருடன் உள்ளிட்ட குழுவினர் அவைத்தலைவர் சீ.வி.கே சிவஞானத்தை சந்தித்து வடக்கு மாகாண சபை தொடர்பிலும் அத்துடன் வடக்கு மாகாண சபையை இயக்குவதில் உள்ள தடைகள் தொடர்பிலும் , யுத்தத்திற்குப் பின்னரான அபிவிருத்தி , மீள்குடியேற்றம், காணி சுவீகரிப்பு மற்றும் இராணுவ பிரசன்னம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

Related Posts