புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான சுவிஸ்குமாரை விடுவித்த குற்றச்சாட்டிற்கு உள்ளாகியிருக்கும் சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்கவுக்கு குற்றச்சாட்டு பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் நேற்று (புதன்கிழமை) இக்குற்றச்சாட்டு பத்திரம் வழங்கப்பட்டுள்ளதோடு, எதிர்வரும் ஒரு மாத காலத்திற்குள் அது குறித்து பதிலளிக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் மாணவி வித்தியா கொலையுண்டார். அதன் பின்னர் கைதான பிரதான சந்தேகநபரான சுவிஸ்குமாரை விடுவித்து, யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கு தப்பிச்செல்ல உதவியதாக குறித்த பொலிஸ் அதிகாரி மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.