புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துள்ளார்.
மேலும் தெற்கு அபிவிருத்தி மற்றும் பிரதமர் காரியாலய பொறுபதிகாரியுமான சாகல ரத்னாயக்க, சட்ட, ஒழுங்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துள்ளார்.
இன்று (11) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற இப்பதவியேற்பு நிகழ்வில் ஜனாதிபதியின் முன்னிலையில் இருவரும் பதவிப் பிரமாணம் செய்தனர்.
நேற்று முன்தினம் (09) தனது பதவியை இராஜினாமா செய்த திலக் மாரப்பனவின் அமைச்சுப் பதவியே இவ்வாறு இவ்விருவருக்கும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.