சுவாதியை கொலை செய்த ராம்குமார் கைது

கடந்த 24-ம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் புகையிரத நிலையத்தில் படு கொலை செய்யப்பட்டார் சுவாதி என்ற தனியார் மென்பொருள் நிறுவன ஊழியர். இக் கொலை தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

swathi-ramkumar

அவர் செங்கோட்டை மீனாட்சிபுரம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான 24 வயது ராம்குமார், (தந்தை பெயர் பரமசிவம்) சுவாதி கொலை தொடர்பாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆலங்குளம் கல்லூரியில் படித்தவர். தந்தை பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறாராம். ராம்குமார் சென்னையில் வேலை தேடி வந்தவர்.

சென்னை சூளைமேட்டில் சுவாதியின் வீட்டருகில் கடந்த மூன்று மாதங்களாக வசித்து வந்தானார் . ஒருதலைக் காதல் காரணமாகவே இந்தக் கொலை நிகழ்ந்துள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. காவல்துறையினர் கொலையாளியின் புகைப்படத்தை வைத்து விசாரித்த போது ராம்குமார் தங்கியிருந்த மேன்ஷனின் காவலாளி ராம்குமார் குறித்த தக்வல்களைக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அதை அடுத்து செங்கோட்டையில் வீடு வீடாக நடத்தப்பட்ட சோதனையில் அவன் சிக்கியுள்ளார்.

சுவாதியைக் கொலை செய்ததாக ராம்குமார் ஒப்புக் கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்படும் போது கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்ய முயன்று தற்போது பாளையங்கோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனையைச் சுற்றிலும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.அவருடைய உடல்நிலை சீராக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.மருத்துவர்கள் அனுமதி கிடைத்தவுடன் அவர் சென்னைக்கு அழைத்து வரப்படவுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

Related Posts