சுழிபுரம் இறங்குதுறையை திறந்துவைக்க ஏற்பாடு

fishermenசுழிபுரம் இறங்குதுறையை மீன்பிடி நீரியல்வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன விரைவில் திறந்துவைக்கவுள்ளதாக சுழிபுரம் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத் தலைவர் கந்தையா குலசிங்கம் இன்று தெரிவித்தார்.

மீன்பிடி நீரியல்வளத்துறை அமைச்சு 10 மில்லியன் ரூபாவும் யு.என்.எச்.ஆர் நிறுவனம் 2 மில்லியன் ரூபாவும் நிதியுதவி வழங்கியுள்ளன. மொத்தமாக 12 மில்லியன் ரூபா செலவில் இந்த இறங்குதுறை, இளைப்பாறும் மண்டபம் மற்றும் இறங்குதுறைக்கான வீதிகள் என்பன நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சுழிபுரம் இறங்குதுறை நிர்மாணிப்புப் பணிகளில் சுழிபுரம் பகுதி கடற்றொழிலாளர்கள் 370 பேர் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Related Posts