சுழிபுரத்தில் புத்தர் சிலை!! : அச்சத்தில் மக்கள்!!

சுழிபுரம் பகுதியில் புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுழிபுரம் சவுக்கடி பிள்ளையார் ஆலயத்திற்கு பின் புறமாக உள்ள அரச மரத்தின் கீழ் குறித்த புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த சிலையானது கடற்படையினரால் வைக்கப்பட்டு இருக்கலாம் எனவும் இது பின்னர் விகாரையாகத் தோற்றம் பெறலாம் எனவும் அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் ஆராய்ந்து, புத்தர் சிலையை அங்கிருந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Posts