சுழிபுரத்தில் நிலக்கீழ் கசிப்பு உற்பத்தி: பொலிஸாரின் சுற்றிவளைப்பில் ஒருவர் கைது!!

சுழிபுரம் பகுதியில் நிலத்துக்கீழ் பங்கர் வெட்டப்பட்டு கசிப்பு உற்பத்தி செய்து வந்த ஒருவர் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டது.

“சுழிபுரம் மத்தியில் நேற்றுமாலை நடத்தப்பட்ட தேடுதலில் இந்த கசிப்பு உற்பத்தியிடம் முற்றுகையிடப்பட்டது.

27 லீற்றர் கசிப்பு மீட்கப்பட்டது. கசிப்பை உற்பத்தி வந்தவர் என சந்தேகிக்கப்படும் 42 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டார்.

நிலத்திலிருந்து 4 அடி கீழ் பங்கர் அமைக்கப்பட்டு கசிப்பு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது” என்று பொலிஸார் தெரிவித்தனர்.

அந்தப் பகுதியில் கசிப்பு உற்பத்தி இடம்பெறுவதாக மக்களால் நீண்ட நாள்களாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. எனினும் நேற்றுமாலையே அதனை சுற்றிவளைத்து பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர் என மக்களால் தெரிவிக்கப்பட்டது.

Related Posts