சுழிபுரத்தில் தொடரும் பதற்றம் – நாளை கடையடைப்பு!!

சுழிபுரத்தில் கொல்லப்பட்ட சிறுமியின் படுகொலைக்கு நீதிகோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம மக்கள் மற்றும் மாணவர்கள் அவ்விடத்திலேயே கூடாரத்தை அமைத்துப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

கல்வி அமைச்சு ஊடாக மாணவிகளின் பாதுகாப்புக்கு உரிய தீர்வு பெற்றுத் தரக் கோரி மாணவர்களும் சுழிபுரம் மக்களும் இன்று காலையிலிருந்து சுமார் 5 மணி நேரத்துக்கு மேலாக சுழிபுரம் சந்தியில் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பலரும் போராட்ட இடத்துக்கு வருகை தந்து மக்களைச் சமாதானப்படுத்த முயன்ற போதும், வடக்கு கல்வி அமைச்சர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் மாணவிகளின் பாதுகாப்பு உரிய தீர்வைப் பெற்றுத் தர வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்று ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் நாளையும் தொடரும் என்பதால் போராட்ட இடத்தில் கூடாரத்தை அமைத்துள்ளனர்.

இதேவேளை நாளை யாழ்ப்பாணத்தில் கடையடைப்புப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு அரச சார்ப்பற்ற நிறுவனங்கள் மற்றும் பேருந்துத் துறையினர், வர்த்தகர்கள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளனர்.

Related Posts