சுழற்பந்து வீச்சாளர்கள் சொதப்பி விட்டனர் – டோனி

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி பெர்த்தில் நேற்று நடைபெற்றது. தோல்விக்கு பிறகு இந்திய கேப்டன் டோனி கூறும் போது,

‘ஆட்டத்தின் இடைவேளையில், எங்களது வீரர்களுடன் வியூகம் குறித்து ஆலோசித்தேன். அப்போது வேகப்பந்து வீச்சாளர்கள் கைகொடுக்காவிட்டால், அதன் பிறகு சுழற்பந்து வீச்சாளர்களை பயன்படுத்த வேண்டி இருக்கும் என்று கூறினேன். ஆனால் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு இப்படி மிகவும் மோசமான நாளாக இது இருக்கும் என்று ஒரு போதும் நினைக்கவில்லை.

ஆடுகளம் பந்து வீச்சுக்கு போதிய ஒத்துழைப்பு அளிக்காத நிலையில் ஆஸ்திரேலிய வீரர்களின் பேட்டிங் உண்மையிலேயே நன்றாக இருந்தது. சில பிரமாதமான ஷாட்டுகளை விளாசினர். அத்துடன் சீராக ஒன்று, இரண்டு ரன்கள் வீதம் எடுப்பதிலும் சிறப்பாக செயல்பட்டனர். அவர்களுக்கு ஓவருக்கு 6 ரன்களுக்கு மேல் தேவைப்பட்டது.

ஆனால் எங்களது சுழற்பந்து வீச்சாளர்கள் கணிசமான பவுண்டரிகளை விட்டுக்கொடுத்ததும் எங்களுக்கு நிறைய நெருக்கடி உருவாகி விட்டது. தொடக்கத்திலேயே 2 விக்கெட்டுகளை வீழ்த்தி எங்களது வேகப்பந்து வீச்சாளர்கள் நல்ல தொடக்கம் ஏற்படுத்தி தந்தனர். ஆனால் சுழற்பந்து வீச்சாளர்கள் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும்.’ என்றார்.

Related Posts