சுழற்சி முறையில் நடமாடும் வங்கிச் சேவை இன்று ஆரம்பம்!! எந்தவொரு வங்கி அட்டையையும் பயன்படுத்தி மக்கள் நன்மையைப் பெற்றுக்கொள்ள முடியும்!!

யாழ்ப்பாணம் மாவட்டம் முழுவதும் நடமாடு வங்கிச் சேவையை ஹற்றன் நஷனல் வங்கி இன்று (ஏப்ரல் 14) செவ்வாய்க்கிழமை தொடக்கம் ஆரம்பித்துள்ளது.

ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால் வங்கிகளுக்குச் சென்று பணத்தை மீளப்பெற முடியாதவர்களுக்கு வசதியாக இந்த நடமாடும் பணம் மீளப்பெறும் சேவையை நடத்துவதாக வங்கியின் வடபிராந்திய அலுவலகம் அறிவித்துள்ளது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையைக் கருத்திற் கொண்டு மக்களின் நன்மை கருதி தன்னியக்க இயந்திரம் ஊடான நடமாடும் வங்கிச் சேவை இன்று ஏப்ரல் 14ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தொடக்கம் வரும் 22ஆம் திகதி புதன்கிழமை வரை யாழ்ப்பாணம் முழுவதும் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்படுகின்றது.

எந்தவொரு வங்கி அட்டையையும் பயன்படுத்தி மக்கள் நன்மையைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று ஹற்றன் நஷனல் வங்கியின் வடபிராந்திய அலுவலகம் அறிவித்துள்ளது.

இதனடிப்படையில் இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் மற்றும் வேலணை

பாசையூர் புனித அந்தோனியார் தேவாலயம் அருகில் – காலை 8.00 மணி தொடக்கம் முற்பகல் 10.30 மணிவரை

குருநகர் அண்ணா சிலை சந்தி – முற்பகல் 10.45 மணி தொடக்கம் நண்பகல் 12.30 மணிவரை

நாவாந்துறை புனித பீட்டர் தேவாலயம் அருகில் – நண்பகல் 12.45 மணி தொடக்கம் பிற்பகல் 2.30 மணிவரை

வேலணை பெருங்குளம் முத்துமாரி அம்மன் கோவிலடி – பிற்பகல் 2.45 மணி தொடக்கம் பிற்பகல் 3.45 மணிவரை

புங்குடுதீவு ஆலடிச் சந்தி – மாலை 4.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணிவரை

நாளை புதன்கிழமை சங்கானை மற்றும் மானிப்பாய்

சங்குவேலி பிள்ளையார் கோவிலடி – காலை 8.00 மணி தொடக்கம் முற்பகல் 9.00 மணிவரை

இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி அருகாமை – முற்பகல் 9.15 மணி தொடக்கம் முற்பகல் 10.15 மணிவரை

மாதகல் புனித ஜொசப் பாடசாலை அருகாமை – முற்பகல் 10.30 மணி தொடக்கம் முற்பகல் 11.30 மணிவரை

சுழிபுரம் வழக்கம்பரை அம்மன் கோவிலடி – முற்பகல் 11.45 மணி தொடக்கம் நண்பகல் 12.45 மணிவரை

மூளாய் பிள்ளையார் கோவில் சந்தி – பிற்பகல் 1.00 மணி தொடக்கம் பிற்பகல் 2.00 மணிவரை

அராலி தெற்கு கி.அ.ச அலுவலகம் அருகாமை – பிற்பகல் 2.15 மணி தொடக்கம் பிற்பகல் 3.15 மணிவரை

நவாலி புனித பீற்றர் தேவாலயம் அருகாமை – பிற்பகல் 3.30 மணி தொடக்கம் மாலை 4.30 மணிவரை

ஆனைக்கோட்டை சந்தி – மாலை 4.45 மணி தொடக்கம் மாலை 5.45 மணிவரை

நாளைமறுதினம் வியாழக்கிழமை அச்சுவேலி

இடைக்காடு சந்தி – காலை 8.00 மணி தொடக்கம் காலை 9.00 மணிவரை

ஆவரங்கால் சந்தி முற்பகல் 9.15 மணி தொடக்கம் முற்பகல் 11.15 மணிவரை

புத்தூர் சந்தி – முற்பகல் 11.30 மணி தொடக்கம் பிற்பகல் 1.30 மணிவரை

நீர்வேலி சந்தி – பிற்பகல் 1.45 மணிதொடக்கம் பிற்பகல் 2.45 மணிவரை

அச்செழுச் சந்தி (இராச வீதி) பிற்பகல் 3.00 மணிதொடக்கம் மாலை 4.00 மணிவரை

நிலாவரை சந்தி- மாலை 4.15 மணி தொடக்கம் மாலை 5.15 மணிவரை

ஏப்ரல் 17ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடிகாமம்

வரணி மத்திய கல்லூரி அருகாமை – காலை 8.00 மணி தொடக்கம் முற்பகல் 10.30 மணிவரை

சுட்டிபுரம் அம்மன் கோவிலடி – முற்பகல் 10.45 மணி தொடக்கம் முற்பகல் 11.45 மணிவரை

உசன் கந்தசாமி கோவிலடி – நண்பகல் 12.00 மணி தொடக்கம் பிற்பகல் 2.00 மணிவரை

புனித நிக்கலஸ் தேவாலயம் – மிருசுவில் அருகாமை – பிற்பகல் 2.15 மணி தொடக்கம் மாலை 4.15 மணிவரை

புனித பீற்றர் தேவாலயம் அருகாமை கச்சாய் வீதி – மாலை 4.30 மணி தொடக்கம் மாலை 5.30 மணிவரை

ஏப்ரல் 18 சனிக்கிழமை பருத்தித்துறை

கொம்மந்தறை மனோன்மணி அம்மன் கோவிலடி – காலை 8.00 மணி தொடக்கம் முற்பகல் 9.30 மணிவரை

பொலிகண்டி பத்திரகாளி அம்மன் கோவிலடி – முற்பகல் 9.45 மணி தொடக்கம் முற்பகல் 10.45 மணிவரை

குமுதெனி சனசமூக நிலையம் அருகாமை – முற்பகல் 11.00 மணி தொடக்கம் நண்பகல் 12.00 மணிவரை

கலைமணி வாசிகசாலை நாவலடி அருகாமை – நண்பகல் 12.15 மணி தொடக்கம் பிற்பகல் 1.15 மணிவரை

புனித தோமையர் தேவாலயம் முனை அருகாமை – பிற்பகல் 1.30 மணி தொடக்கம் பிற்பகல் 2.30 மணிவரை

நெல்லண்டை பத்திரகாளி அம்மன் கோவில் அருகாமை தும்பளை – பிற்பகல் 2.45 மணி தொடக்கம் மாலை 4.00 மணிவரை

புத்தளை மகாவித்தியாலயம் அருகாமை – மாலை 4.15 மணி தொடக்கம் மாலை 5.30 மணிவரை

ஏப்ரல் 19 ஞாயிற்றுக்கிழமை நெல்லியடி

உடுப்பிட்டி சந்தை அருகாமை – காலை 8.00 மணி தொடக்கம் முற்பகல் 9.00 மணிவரை

வல்வெட்டித்துறை சந்தை அருகாமை – முற்பகல் 9.15 மணி தொடக்கம் முற்பகல் 10.15 மணிவரை

அரசடி பாடசாலை அல்வாய் அருகாமை – முற்பகல் 10.30 மணி தொடக்கம் முற்பகல் 11.30 மணிவரை

இமையானன் சனசமூக நிலையம் அருகாமை – முற்பகல் 11.45 மணி தொடக்கம் நண்பகல் 12.45 மணிவரை

கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரி அருகாமை – பிற்பகல் 1.00 மணி தொடக்கம் பிற்பகல் 2.00 மணிவரை

கிழவி தோட்டம் பிள்ளையார் கோவிலடி கரவெட்டி – பிற்பகல் 2.15 மணிதொடக்கம் பிற்பகல் 3.15 மணிவரை

இந்திர அம்மன் கோவிலடி துன்னாலை – பிற்பகல் 3.30 மணிதொடக்கம் மாலை 4.30 மணிவரை

உபயகதிர்காமம் கோவில் புலோலி அருகாமை – மாலை 4.45 மணி தொடக்கம் மாலை 5.45 மணிவரை

ஏப்ரல் 20 திங்கட்கிழமை சாவகச்சேரி

மட்டுவில் தெற்கு வளர்மதி சனசமூக நிலையம் அருகாமை – காலை 8.00 மணி தொடக்கம் முற்பகல் 9.30 மணிவரை

மடத்தடி சந்தி மட்டுவில் – முற்பகல் 9.45 மணிதொடக்கம் முற்பகல் 11.45 மணிவரை

கனகம்புளியடி சந்தி சரசாலை – நண்பகல் 12.00 மணிதொடக்கம் பிற்பகல் 1.30 மணிவரை

கச்சாய் அம்மன் கோவிலடி – பிற்பகல் 1.45 மணி தொடக்கம் பிற்பகல் 3.15 மணிவரை

அல்லாரை அரசினர் தமிழ் வித்தியாலயம் அருகாமை – பிற்பகல் 3.30 மணிதொடக்கம் மாலை 5.00 மணிவரை

ஏப்ரல் 21 செவ்வாய்க்கிழமை சுன்னாகம்

அளவெட்டி சைவ மகா சபை அருகாமை – காலை 8.00 மணி தொடக்கம் முற்பகல் 9.30 மணிவரை

ஏழு கோவில் வீதி – முற்பகல் 9.45 மணி தொடக்கம் முற்பகல் 11.30 மணிவரை

மயிலிட்டி துறைமுகம் அருகாமை – முற்பகல் 11.45 மணி தொடக்கம் பிற்பகல் 1.00 மணிவரை

வளலாய் மீன் சந்தை அருகாமை – பிற்பகல் 1.15 மணி தொடக்கம் பிற்பகல் 2.00 மணிவரை

தொண்டைமானாறு சந்தி – பிற்பகல் 2.15 மணி தொடக்கம் பிற்பகல் 3.00 மணிவரை

கெருடாவில் கந்தசாமி கோவிலடி – பிற்பகல் 3.15 மணி தொடக்கம் மாலை 4.15 மணிவரை

வல்வெட்டி வல்வை றெயின்போ மைதானம் அருகாமை – மாலை 4.30 மணி தொடக்கம் மாலை 5.30 மணிவரை

ஏப்ரல் 22 புதன்கிழமை பருத்தித்துறை

உதயசூரியன் சனசமூகநிலையம் அருகாமை – காலை 8.00 மணி தொடக்கம் முற்பகல் 10.00 மணிவரை

மணற்காடு தேவாலயம் அருகாமை – முற்பகல் 10.15 மணி தொடக்கம் முற்பகல் 11.15 மணிவரை

பொற்பதி புனித பீற்றர் தேவாலயம் அருகாமை – முற்பகல் 11.30 மணி தொடக்கம் நண்பகல் 12.30 மணிவரை

அம்பன் சமுர்த்தி வங்கி அருகாமை – நண்பகல் 12.45 மணிதொடக்கம் பிற்பகல் 1.45 மணிவரை

நாகர்கோவில் முருகன் கோவிலடி – பிற்பகல் 2.00 மணி தொடக்கம் பிற்பகல் 3.00 மணிவரை

மருதங்கேணி சந்தி – பிற்பகல் 3.15 மணிவரை மாலை 4.15 மணிவரை

மருதங்கேணி தமிழ் கலவன் பாடசாலை அருகாமை – மாலை 4.30 மணி தொடக்கம் மாலை 5.30 மணிவரை

Related Posts