சுழற்சி முறையிலான உணவுத்தவிர்ப்பு போராட்டம் தொடர்கின்றது

புதுக்குடியிருப்பு பிரதேசசெயலகத்திற்கு முன்னாள் கடந்த 3 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று இருபத்துமூன்றாவது நாளாக இடம்பெற்று வருகின்றது.

கடந்த 9 ஆம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிலர் தமது காணிகளை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்திருந்தனர்.

எனினும் இதுவரை அந்த கோரிக்கைக்கு உரிய தீர்வு இதுவரை முன்வைக்கப்படவில்லை.

இந்த நிலையில் புதுக்குடியிருப்பு மக்கள் கடந்த 13 ஆம் திகதி சுழற்சி முறையிலான உணவுத்தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இந்த உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று 13 ஆவது நாளாக தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

19 குடும்பங்களிற்கு சொந்தமான 49 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு கோரி போராட்டத்தை முன்னெடுத்தனர்.

Related Posts