சுலக்ஷனின் வீட்டுக்கு அருகில் நின்றோர் மீது தாக்குதல்

பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த யாழ். பல்கலைகழக மாணவனான விஜயகுமார் சுலக்ஷனின் வீட்டுக்கு அருகில் நின்ற யாழ். பல்கலைகழக மாணவர்கள் மற்றும் ஊரார் மீதும் இலக்க தகடற்ற ஜீப் ரக வாகனத்தில் வந்தவர்கள் தாக்குதல்களை மேற்கொண்டு உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சுன்னாகம் கந்தரோடை ஆலம்பிட்டி சந்திக்கு அருகில் செவ்வாய் இரவு 7 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்று உள்ளது.

இது குறித்து தெரியவருவதாவது ,

உயிரிழந்த மாணவனின் வீட்டுக்கு முன்பாக உள்ள ஆலம்பிட்டி சந்தி பகுதியில் யாழ்.பல்கலைகழக மாணவர்கள் மற்றும் ஊரார் கூடி இருந்தனர்.

அவ்வேளை, இலக்க தகடற்ற ஜீப் ரக வாகனத்தில் வந்த குழுவினர் அவர்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டனர். அதனால் அங்கிருந்தவர்கள் சிதறி ஓடினார்கள். அதனை அடுத்து தாக்குதலாளிகள் அந்த இடத்தில் இருந்து சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி

மர்ம வாகனத்தில் வந்தவர்கள் இளைஞர்கள் மீது தாக்குதல் !

Related Posts