சுரேன் ராகவன் இரணைமடு விவசாய சம்மேளன உறுப்பினர்களை சந்தித்தார்!

நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் கிளிநொச்சி இரணைமடு விவசாய சம்மேளன உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

குறித்த சந்திப்பு நேற்று (புதன்கிழமை) பிற்பகல் 5 மணியளவில் இரணைமடு விவசாய சம்மேளன கட்டடத்தில் இடம்பெற்றது.

வடக்கு மாகாண ஆளுநராக இருந்த காலம் தொட்டு இரணைமடு விவசாய சம்மேளனத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் சுரேன் ராகவனின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்றையதினம் கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கும் விவசாயிகளிற்கும் இடையில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது இரணைமடு குளத்தின் கீழ் மண்ணகழ்வு இடம்பெறுகின்றமை, குளத்தின் பாதுகாப்பு மற்றும் கட்டுமானங்கள், விவசாய செய்கையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

குறித்த சந்திப்பு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் மற்றும் இரணமைடு விவசாய சம்மேளனத்தின் செயலாளர் முத்து சிவமோகன் ஆகியோர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்தனர்.

Related Posts