சுயேட்சையாக களமிறங்குகிறார் விஜயகலா?

vijayakala-makeswaranஐக்கிய தேசிய கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் சார்ந்த குழுவினர், எதிர்வரும் வடமாகாண சபை தேர்தலில் சுயேட்சைக் குழுவாக போட்டியிடவுள்ளனர் என்று கட்சியின் நம்பத் தகுந்த தகவல் தெரிவிக்கின்றன.

இருப்பினும், விஜயகலா மகேஸ்வரன் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு, வடமாகாண சபை தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த போதிலும், அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை இராஜினாமா செய்யவில்லை என்றும் மாகாண சபை தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், வட்டுக்கோட்டை பகுதியிலிருந்து சிலரை தெரிவு செய்து சுயேட்சையாக களமிறக்கியுள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய, சிறிராஜ் என்பவர் முதன்மை வேட்பாளராகவும், வட்டுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த லவக்குமார் என்பவரை இரண்டாவது வேட்பாளராக போட்டியிட தெரிவாகியுள்ளனர் என்று அத்தகவல்கள் மேலும் குறிப்பிடுகின்றன.

Related Posts