சுயலாபத்திற்காக ஈழப் பிரச்சினையை தமிழக கட்சிகள் பயன்படுத்துகின்றன: நடிகர் ராஜ்கிரண்

உலக அரசியலுக்குள் சிக்கியுள்ள ஈழத் தமிழர்களின் பிரச்சினை குறித்து இந்தியாவில் பேசுவதால் எதுவும் நடக்கப்போவதில்லை என்று தெரிந்தும், தத்தமது கட்சிகளைப் பலப்படுத்துவதற்காகவும், சுயலாப அரசியலுக்காவும் தமிழகத்தில் சிறு கட்சிகள் உணர்ச்சிப் பொங்க பேசிவருவதாக பிரபல தென்னிந்திய நடிகர் ராஜ்கிரண் தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ஈழத் தமிழர்கள் பிரச்சினை என்பது, வெறுமனே ஐந்து பத்து நிமிடங்கள் கதைக்கும் விடயம் அல்ல என்றும், அது பூலோக ரீதியிலான பரந்துபட்ட ஒரு அரசியல் விடயம் என்றும் கூறினார்.

மேலும், இறுதி யுத்தத்தில் ஸ்ரீலங்கா அரசும், இந்திய அரசும இணைந்து 1 இலட்சத்து 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்களை கொன்று, மிகப்பெரும் இன அழிப்பை செய்ததாக குற்றஞ்சாட்டிய ராஜ்கிரண், பல்லாயிரக்கணக்கான போராளிகளை பிடித்துச் சென்ற ஸ்ரீலங்கா அரசு, அவர்களை இன்னும் சித்திரவதைச் செய்வதாகவும், அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று தெரியாத நிலையே தொடர்வதாகவும் சுட்டிக்காட்டினார்.

Related Posts